India
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூர கொலை.. சிறுமியைச் சிதைத்த கும்பல்.. உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அங்கு சென்றனர்.
அப்போது கோடரி போன்ற கொடூர ஆயுதங்களால் நான்கு பேரும் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருந்தனர். இதையடுதது நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த நான்கு பேரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. மேலும், இவர்களது வீட்டின் அருகே உள்ள மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்ததும், உயிரிழந்த சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!