India
டிசம்பர் 15 முதல் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை... 14 நாடுகளுக்கு தடை தொடரும்!
டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது முதல் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடை 2021 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தாலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்தை, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் துவக்குவது குறித்து, ஒன்றிய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் எடுத்த முடிவுகளின்படி, வரும் டிச.,15 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வகையாக வெளிநாடுகள் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இந்த விமான சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!