India
“நகைகளுடன் இரவில் நடமாட முடியுமா என்பதை உ.பி பெண்களிடம் கேட்டு பாருங்கள்” : அமித்ஷாவை சாடிய பிரியங்கா!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு துவக்கத்திலேயே சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இப்போதே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷதா உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற வந்திருந்தார். அப்போது அமித்ஷா, "உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமி கூடஇரவில் நகைளை அணிந்துக் கொண்டு சாலைகளில் நடந்து செல்லாம்.
திருவிழா காலங்களில் இரவில் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக சென்று வரமுடியும். அந்தளவிற்கு உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் கான்பூரில் நடந்த செயின் பறிப்பு சம்பவ செய்தி ஒன்றையும் ட்விட்டரில் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேசத்தில் நகைகள் அணிந்து கொண்டு பெண்கள் இரவில் போகலாம் என்று கூறுவது வெறும் வார்த்தை ஜாலம். உத்தர பிரதேசத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இவர்கள் தினமும் என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்கள் என்பது தெரியும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே பெண்கள் மீதான அதிகமான வன்முறைகள் நடக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கிறது என பல புள்ளிவிவரங்கள் கூறிவரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷதா மட்டும் எப்படி சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என நாகூசாமல் பொய்பேசமுடிகறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!