India

எதிர்ப்பை மீறி ₹1,171 கோடி ஒப்பந்தம் விறுவிறு; ’இந்தியா ஹவுஸ்’ கட்ட மோடி அரசு மும்முரம்!

டெல்லியில் புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம், அரசு அலுவலகங்கள் சுமார் 20 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

பொருளாதார நெருக்கடியில் தற்போது இவை தேவைதானா என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்பின. அதனை கண்டு கொள்ளாமல் திட்டப்பணிகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வருகிறது.

இதனிடையே தற்போது பிரதமருக்கு புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் பிரதமருக்கான அலுலகம், அமைச்சரவை செயலாளர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு அலுவலகங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தின் இரண்டு மாடிகளை வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதற்கான சிறப்பு அலுவமாக வடிவமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா இல்லம் என்ற பெயரை வைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியா கேட் அருகே உள்ள ஹைதராபாத் மாளிகையில்தான் வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனை இந்த புதிய கட்டடத்துக்கு மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டடத்துக்கான முன் ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது.

Also Read: “இந்த தலை அந்த உடலோடு...” : போட்டோஷாப் செய்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசனின் அடடே விளக்கம்!