India
“இந்திய எல்லைகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிய சீனா?” : அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.
கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்தாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்தது. ஆனால் சீன அரசிடம் இருந்து உரியத் தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சீனா பின்வாங்கிச் சென்றது. இருந்தாலும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் ராணுவம் தொடர்பான ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தான் இந்திய எல்லையில் 2020ம் ஆண்டு சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான செயற்கைக்கோள் படத்தையும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. சீன ராணுவம் தொடர்ந்து எல்லையை ஆக்கிரமித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், அமெரிக்காவின் அறிக்கை அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!