India
வெற்றிலை பாக்கு போட்டது குத்தமா? பீகாரில் வியாபாரி சுட்டுக்கொலை; நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த இஷான் மாலிக் என்பவர் பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள புரானி குய்லா பகுதியில் வசித்து வருகிறார்.
சாலையோரத்தில் ரெடிமேட் துணிகளை வியாபாரம் செய்து வருகிறார் இஷான். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் வெற்றிலை பாக்கை போட்டபடி சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, சமையல் அறையின் ஜன்னல் வழியாக குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்கை துப்பியிருக்கிறார். அவ்வாறு துப்பிய வெற்றிலை பாக்கு கீழே இருந்த கோலு மியான் என்ற இளைஞன் மீது விழுந்திருக்கிறது.
இதனால் கடும் ஆத்திரத்திற்கு ஆளாக மியான், உடனடியாக இஷானின் வீட்டுக்குச் சென்று சண்டையிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து இஷானை சுட்டுத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினை இஷான் மாலிக்கை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக சிவான் மாவட்டத்தில் உள்ள சாரை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி 18 வயதே உடைய கோலு மியானை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
விசாரணையில் குற்றவழக்குகள் ஏதும் கோலு மீது இல்லையென்றாலும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை உபயோகித்தது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் புரானி குய்லா பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!