India
“தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்” : தலைமை காவலரின் மகனுக்கு நேர்ந்த அவலம் - அதிர்ச்சி சம்பவம்!
கோவா மாநிலம், பிகோலிம் நகராட்சியில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார் தசரத் வைகங்கர். இவர் நேற்று இரவி பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்
அப்போது, வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியை வைத்துவிட்டு குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அந்த நேரம் அவரது நான்கு வயது மகன் துப்பாக்கியை எடுத்தபோது, தவறுதலாக டிரிகரில் கைப்பட்டு குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்துள்ளது.
பிறகு, துப்பாக்கிச் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது சிறுவன் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துகிடந்தான். உடனே அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவலர் தசரத் வைகங்கர் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அவருக்கு போலிஸார் துப்பாக்கி வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து போலிஸார் வீட்டில் துப்பாக்கிகளை வைக்கும் போது பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாகச் சிறுவர்கள் அதை எடுக்காதவாறு உயரமான இடங்களில் வைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?