India
"26% நீதிமன்றங்களில் கழிவறையில்லை": ஒன்றிய சட்ட அமைச்சர் முன்பே புள்ளி விவரத்தை அடுக்கிய தலைமை நீதிபதி!
இந்தியாவில் சுமார் 26% நீதிமன்றங்களில் பெண்களுக்காகத் தனி கழிப்பறை வசதி இல்லை என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று புதிய நீதிமன்ற கட்டிடத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா," இந்தியாவில் உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. இதனால் நீதிமன்றம் திறம்படச் செயல்படுவது கடினமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் 5% நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே அடிப்படை மருத்துவ உதவிகள் உள்ளது. 26% நீதிமன்றங்களில் பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லை. 16% நீதிமன்றங்களில் ஆண்களுக்குக் கழிப்பறைகள் இல்லை.
மேலும் 50% நீதிமன்ற வளாகங்களில் நூலகம் இல்லை. 46% நீதிமன்ற வளாகங்களில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வசதி இல்லை. நீதிமன்ற உள்கட்டமைப்பு குறித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். விரைவில் இதற்குப் பதில் வரும் என நான் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் நீதிமன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய சட்ட அமைச்சர் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்து கொண்டார். மேடையில் ஒன்றிய அமைச்சர் அமர்ந்து இருக்கும்போதே நீதிமன்ற கட்டமைப்புகள் குறித்து தலைமை நீதிபதி குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!