India
ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுவர்கள்: அசாமில் நடந்த பயங்கரம்!
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்திற்குட்பட்ட நிஜோரி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் செல்போனில் ஆபாச படம் காட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளனர்.
அப்போது, சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து தப்பிக்கப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிற்சாலைக்கு இழுத்துச் சென்று அங்குக் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் எதுவும் நடக்காததுபோலவே, சிறுமியின் வீட்டிற்குச் சென்று கல் உடைக்கும் ஆலையில் உங்கள் மகள் மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அங்குச் சென்ற பெற்றோர் மகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் சிறுமியை அடித்து கொலை இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஒரு சிறுவனின் தந்தை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!