India
வீட்டுப்பாடம் முடிக்கலையா? ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் உயிரிழந்த மாணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்திற்குட்பட்ட சலாசர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் கணேஷ் என்ற மாணவர் 7ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் புதன்கிழமையன்று மாணவன் கணேஷ் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதால் அவரது வகுப்பு ஆசிரியர் மனோஜ் பிரம்பால் அடித்துள்ளார்.
இதில் மாணவன் மயங்கி விழுந்துள்ளார். அப்போது வேண்டும் என்றே மயங்கி விழுந்ததை போல் நடிக்கிறாயா என கூறி மேலும் அடித்துள்ளார். இது பறித்து அறிந்த மாணவனின் பெற்றோர் உடனே பள்ளிக்குச் வந்தனர். அப்போது வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் அடித்ததில் உங்கள் மகன் மயங்கி விழுந்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிறகு உடனே மாணவன் கணேஷை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஆசிரியர் மனோஜ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் மாணவனை அடித்த ஆசிரியர் மனோஜை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!