India
“பெட்ரோல் விலை 200-ஐ கடந்தால் 3 பேர் செல்லலாம்” : ஐடியா என்ற பெயரில் விபரீத யோசனை சொன்ன பா.ஜ.க தலைவர் !
இந்தியாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்தே தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது 100 ரூபாயைக் கடந்து விட்டது. கொரோனா நெருக்கடியான காலத்திலும் பெட்ரோல் விலை உயர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற குரல் நாடுமுழுவதும் ஒலித்து வருகிறது. ஆனால் பா.ஜ.க தலைவர்களோ, “பெட்ரோல் விலை கூடுனா சைக்கிள் ஓட்டுங்கள், இது எல்லாம் ஒரு பிரச்சனையா" என்றும் "விலை உயர்வு குறித்துப் பேசுவோர் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லுங்கள்" என சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் மாநில பா.ஜ.க தலைவர் ஒருவர், 200 ரூபாயை பெட்ரோல் விலை எட்டினால் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில அரசுகளுக்கு புது ஐடியா கொடுப்பதாக நினைத்து காமெடி செய்துள்ளார்.
இது குறித்து அசாம் மாநில பா.ஜ.க தலைவர் பாபேஷ் கலிடா பேசும்போதும், “பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. எரிபொருளைச் சேமிக்க வேண்டும் என்றால் கார்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கு விற்கும் போது இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் பாபேஷ் கலிடாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இவரின் இந்த பேச்சைப் பார்க்கும் போது பா.ஜ.க அரசுக்கு பெட்ரோல் விலையைக் குறைக்கும் எண்ணம் துளிகூட இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!