India
“14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் - தர்ம அடி கொடுத்த பெற்றோர்” : நடந்தது என்ன?
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் பிடுகுறாலு அருகே உள்ள பாணோதையா பப்ளிக் என்னும் தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், ஆசிரியராக பணியாற்றி வரும் யுகந்தர் என்பவர், அதேபள்ளியில் பயிலும் 14வயது சிறுமியை பலமுறை தனக்கு அறைக்கு தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து மாணவி பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் மாணவியின் நடவடிக்கையால் அச்சமடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் உள்ள ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் பள்ளிக்கு புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலிஸார் ஆசிரியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!