India
“என்னது ஒரு டீ 1,000 ரூபாயா? ஹைதராபாத் மக்களை ஆச்சரியப்படுத்திய டீக்கடை” : அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்தியாவில் லெமன் டீ, இஞ்சி டீ, கிரீன் டீ, செப்பருத்தி டீ, ஈரானி டீ, சைனீஸ் டி என பலவிதமான டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நீலோஃபர் டீக்கடை புதியவகை டீ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த டீ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அப்படி என்னதான் இருக்கிறது இந்த டீயில் என பலரும் அதை வாங்கி குடித்து வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் தங்களது புதிய கிளையை நீலோஃபர் டீக்கடை திறந்துள்ளனர். இந்த கடையில்தான் தங்களது புதிய டீயை அறிமுகம் செய்துள்ளனர். ஒரு கப் டீ 1000 ரூபாய் என்பதால் அப்படி என்னதான் இந்த டீயில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே ஆயிரம் ரூபாய் கொடுத்து டீயை ருசித்துப் பார்த்துச் செல்கின்றனர்.
இது குறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், “அசாமில் ‘கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ’ என்ற டீ தூளை ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்துக்கு நாங்கள் ஏலம் எடுத்தோம். இந்த டீ தூள் அரிதானது. அதோடு உயர்ந்த வகை டீ தூள்.
இந்த டீ தூளைப் பயன்படுத்துவதால் தான் ஒரு கப் டீயை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இந்த டீ குடித்தாள் அவ்வளவு சுவையாக இருக்கும். இப்படி ஒரு டீ இது வரை நாம் குடித்தது இல்லையே என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். பலரும் டீ குடித்து விட்டு நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க ; முதல்முறையாக உண்மையை சொன்ன விஜய்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!
-
தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!