India
சோமாலியாவை நெருங்கும் இந்தியா... உலக பட்டினி தரவரிசையில் அபாயகட்டம்!
உலகம் முழுவதும் மக்கள் பட்டினியால் வாடும் நாடுகள் குறித்த தரவரிசையில் இந்தியா 101வது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் கொரோனா, பொருளாதார பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் பல நாடுகளில் பட்டினி, வறுமை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னரான பொருளாதார சூழல்களாலும் வறுமை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலகளவில் அதிகம் பட்டினி ஏற்பட்டுள்ள நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பட்டினி குறைவாக உள்ள நாடுகள் முதலில் இடம்பெறும். அடுத்தடுத்து பட்டினி அதிகமுள்ள நாடுகள் இடம்பெறும்.
உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த தரவரிசையில் 116 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 101வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மேலும் சரிந்துள்ளது. மேலும் பட்டினி மிகவும் அதிகமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது.
116வது இடத்தில் சோமாலியா உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 92வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் 76வது இடத்திலும் உள்ளன.
Also Read
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!