India
கொரோனா பலி எண்ணிக்கையில் குளறுபடி செய்த மோடி அரசு... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
கொரோனா பலி எண்ணிக்கை குறித்து பொய்யான தரவுகளை ஒன்றிய பா.ஜ.க அரசு வெளியிட்டதாகவும் இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட உயிரிப்புகளை அரசியல் தலையீட்டால் குறைத்து காண்பித்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
“ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் இருந்தபோது ஐ.சி.எம்.ஆர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனா பலி குறித்து வெளியிட்ட தரவுகள் அரசியல் தலையீட்டால் பொய்யாக வெளியிடப்பட்டவை” என ஐ.சி.எம்.ஆர் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த செய்தி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. அதை சுட்டிக்காட்டி பிரமர் மோடி, முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், “ஐ.சி.எம்.ஆர் அமைப்பால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை மறைத்துப் போலியான புள்ளிவிவரங்களை வெளியிட அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததாக அறிவியல் வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஐசிஎம்ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கொரோனா இரண்டாம் அலையில், 4,43,497 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தவறானது. உண்மையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 லட்சம் அல்லது அதிகபட்சமாக 68 லட்சமாக இருக்கலாம்.
ஐ.சி.எம்.ஆர் அமைப்பில் பணியாற்றிய வல்லுநர்கள் அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் போன்றவை புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அதிகம் இருந்தன எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
இது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கும் எதிரானது. லட்சக்கணக்கான மரணங்களைத் தடுப்பதற்கும் எதிரானது.” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!