India
“உன்னால எனக்கு பொண்ணு கிடைக்கல” : காதலியை குத்திக் கொலை செய்த காதலன் - கேரளாவில் பயங்கரம்!
கேரள மாநிலம், நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆரியநாடு பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர் திடீரென மாற்றுத்திறனாளி பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த அருண் தப்பிக்க முயன்றபோது தடுக்க வந்த பெண்ணின் பெற்றோரையும் தாக்கியுள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வருவதற்குள் அருண் தப்பிச் சென்றுள்ளார். பிறகு அருணை விரட்டிச் சென்ற பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து அருணை போலிஸிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அருணிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாற்றுத்திறனாளி பெண்ணும், அருணும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர். பிறகு அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் மாற்றுத்திறனாளி பெண்ணை அருண் எங்கு பார்த்தாலும் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் இவர்கள் காதலித்தது ஊர் மக்களுக்குத் தெரியும் என்பதால் அருணுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்துள்ளது. இதனால் பெண் கிடைக்காத விரக்தியில் அருண் மாற்றுத்திறனாளி பெண்ணை குத்திக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!