India
2 பேர் சுட்டுக்கொலை... முன்னாள் ராணுவ வீரரை கைது செய்த ஆந்திரா போலிஸ்: என்ன காரணம்?
ஆந்திர மாநிலம், ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவராவ். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவா, பாலகிருஷ்ணா ஆகியோருக்கு இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாகவும் கிராமப் பஞ்சாயத்தில் இரு தரப்பினரும் பிரச்சனை எதுவும் செய்யாமல் சமாதானமாகச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், சாம்பசிவா ராவ் கிராம பஞ்சாயத்தின் முடிவை ஏற்காமல் தொடர்ந்து அவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சாலையில் நின்றுகொண்டிருந்த சிவா, பாலகிருஷ்ணா, இவரது உறவினர் ஆஞ்சநேயலு ஆகிய மூன்று பேரையும் சாம்பசிவ ராவ் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், சிவா, பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆஞ்சநேயலு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சாம்பசிவராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!