India
காதல் தொல்லை.. மது வாங்கி கொடுத்து நண்பரை கொலை செய்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
கர்நாடக மாநிலம், பாகல் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுமந்தா. இவர் சம்பவத்தன்று நண்பரைப் பார்த்து வருவதாகக் வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பிறகு இரவாகியும் அனுமந்தா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து கிராமத்திற்கு வெளியே இருந்த தோட்டம் ஒன்றில் அனுமந்தா சடலமாக இருப்பதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் அனுமந்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அனுமந்தா நண்பரின் தங்கையைக் காதலித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து நண்பர் கேட்டபோது அனுமந்தா மறுத்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அனுமந்திற்கு மது வாங்கிக் கொடுத்து, இருவரும் ஒன்றாகக் குடித்துள்ளனர்.
அப்போது, நண்பர் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அனுமந்தாவை சரமாரியாகக் குத்தி கொலைசெய்தது விசாரணை தெரியவந்தது. பின்னர் அனுமந்தாவின் நண்பரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!