India
கேரளாவில் தறிகெட்டுப் பரவும் கொரோனா : மீண்டும் வேகமெடுக்கும் தொற்று... காரணம் என்ன?
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெகுவாக அதிகரித்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு ஓரளவு குறைந்து வந்தது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது கேரள அரசு.
கேரள அரசின் இந்த முடிவுக்கு நீதிமன்றம் உட்பட பல்வேறு தரப்புகளும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு பின்பு கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று தினசரி பாதிப்பு 13,383 ஆகவும் இறப்பு 90 ஆகவும் கேரளாவில் பதிவானது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 215 பேர் உயிரிழந்துள்ளனர். 2 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் கேரளாவில் இருந்துதான் பதிவாகி வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!