India
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தொழிலதிபர் அடித்துக் கொலை.. பணம் தருவதாக அழைத்துச் சென்று பயங்கரம்!
ஆந்திர மாநிலம், கலாபாதர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சாதிக். இவர் அதேபகுதியில் குப்பைகள் வாங்கும் தொழில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், அப்துல் சாதிக், மற்றொரு தொழிலதிபர் சாதிக்பின் அலி என்பவருக்கு ரூபாய் 8 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட தேதியில் கடனை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால், அப்துல் சாதிக் கொடுத்த கடனை சாதிக்பின் அலியிடம் திருப்பிக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை முழுமையாகக் கொடுக்க முடியாததால் சாதிக்பின் அலி கடன் தொகையில் ஒரு பகுதியை மட்டும் கொடுத்துள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து மீதி தொகையைக் கேட்டு அப்துல் சாதிக் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு அப்துல் சாதிக்கை தனது வீட்டிற்கு சாதிக்பின் அலி அழைத்துச் சென்று பேசியுள்ளார்.
அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்துல் சாதிக்கை அடித்க்து கொலை செய்துவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அப்துல் சாதிக்இன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அப்துல் சாதிக் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!