India

அரசு நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு காசு பார்க்கும் பாஜக: ’இது போலி தேச பக்தி’ என அரசியல் தலைவர்கள் சாடல்

நாட்டில் நிலவும் எல்லா சிக்கல்களுக்கும் முந்தைய அரசை நோக்கி குறை கூறுவது ஒன்றிய பா.ஜ.க அரசின் அனிச்சை செயலாக உள்ளது. ஆனால், அந்த முந்தைய அரசை மிஞ்சும் வகையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், அவர்கள் உருவாக்கி வைத்திருப்பதை குத்தகைக்கு விட்டு, நிதி திரட்டும் வேலையில் மட்டுமே பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி தேவையை ஈடுகட்ட ரயில்வே, நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளிட்ட 12 முக்கிய துறைகளின் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விட ஆயத்தமாகியுள்ளது ஒன்றிய அரசு.

இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகள், அதாவது 2024 - 25 வரையில் 6 லட்சம் கோடி ரூபாயினை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், அரசின் சொத்துகள் தனியார் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இந்த சொத்துகளின் உரிமை இந்திய அரசின் வசேமே இருக்கும்.

Also Read: பெட்ரோல், டீசல் விலைலாம் ஒரு உயர்வா? - பாஜக எம்.பி பிரக்யா தாகூர் பேச்சால் மக்கள் கொதிப்பு!

அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்பது அடிப்படை விதி. ஆனால் அரசின் நிதி வருவாயினை இப்படி சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம்தான் பெருக்க வேண்டுமா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பெரியளவில் வரிக்குறைப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிய அரசு, தற்போது அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அரசு நிறுவனங்களை குத்தகைக்கும் விடுகிறது. இது ஒன்றிய அரசின் நிர்வாக திறனற்ற தன்மையையும், போலி தேச பக்தியையும் காட்டுவதாக குற்றச்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

மக்களின் நேரடி பயன்பாட்டில் உள்ள ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளை தனியாரிடம் வழங்குவது, ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் சுமை தான் என்பதும் அரசியலாளர்களின் ஒரே குரலாக இருக்கிறது.

Also Read: ”கடத்தலுக்கு முன்.. கடத்தலுக்கு பின்” : கொள்ளையர்களைக் கைது குறித்து திருப்பூர் எஸ்.பி வெளியிட்ட மீம்ஸ் !