India
முதலிரவு அறையில் கேமரா... வீடியோவை காட்டி பணம் பறித்த கும்பல் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
கேரள மாநிலம், கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். தொழிலதிபரான இவர் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் காசர்கோடு பகுதியில் ஸாஜிதா என்ற பெண் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்துல் ஸத்தர் பெண் வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, ஸாஜிதாவின் பெற்றோர் என்.ஏ.உம்மர், பாத்திமா ஆகியோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அப்துல் ஸத்தாருக்கும், ஸாஜிதாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்குவதற்காக கொவ்வல்பள்ளியில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்துள்ளனர். அங்குதான் இவர்களுக்கு முதலிரவு நடந்துள்ளது.
இதையடுத்து, இக்பால் என்பவர் அப்துல் ஸத்தாரிடம் முதலிரவு வீடியோவை காட்டியுள்ளார். இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். முதலிரவை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இக்பால் இந்த வீடியோவை காட்டி பணம் மற்றும் நகை ஆகியவற்றைக் கேட்டுள்ளார். தரவில்லையென்றால் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அப்துல் ஸத்தார் ரூபாய் 3 லட்சம் பணம் மற்றும் ஏழரை பவுன் நகையைக் கொடுத்துள்ளார்.
இருந்தபோதும், இக்பால் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த அப்துல் ஸத்தார் இதுகுறித்து போலிஸில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலிஸார் இக்பாலை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போதுதான் நடந்தது ஒரு மோசடி திருமணம் என அப்துல் ஸத்தாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் செய்த ஸாஜிதாவின் பெற்றோர் என கூறிய என்.ஏ.உமர், பாத்திமா ஆகியோர் அவரது பெற்றோர் இல்லை என்பதும் தெரியவந்தது.
பணம் பறிக்கவே மோசடியாக திருமணம் செய்து, முதலிரவை வீடியோ எடுத்து மிரட்டியது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஸாஜிதா இதுபோன்று ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!