India
இந்தியாவில் 3வது அலை பரவத் தொடங்கிவிட்டதா..? - 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பிறகு, படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேர் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 585 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அதிகமாகக் குழந்தைகளைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெங்களூருவில் கடந்த 1ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்குள் 543 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 88 குழந்தைகள் 9 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 411 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகளையே கொரோனா தொற்று அதிகம் தாக்கும் என்று அமெரிக்க நார்வே குழு நடத்திய ஆய்வில் கூறியுள்ள நிலையில், பெங்களூரில் 500 குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!