India

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் : எங்குத் தெரியுமா?

இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பேருந்து, ரயில் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்ததை அடுத்து மீண்டும் போக்குவரத்து சேவையை துவங்க மாநில அரசுகள் அனுமதி அளித்தது.

அதேபோல், கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு இங்குத் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மின்சார ரயில்களில் மக்கள் பயணம் செய்யத் மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு டோய் தடுப்பூசி செலுத்தியவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்ரே கூறுகையில், “இதுவரை மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே, முதல் கட்டமாக மின்சார ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மகாராஷ்டிரா அரசு வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: கடலை கார்ப்பரேட்டுக்குத் தாரை வார்ப்பதா? - ஒன்றிய அரசின் மீன்வள மசோதாவுக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் !