India
‘பேஸ்புக் லைவ்’வில் முடிந்த மூன்றாண்டு காதல்.. காதலன் எடுத்த விபரீத முடிவு: மும்பையில் நடந்த சோகம்!
மும்பையைச் சேர்ந்தவர் அங்குஷ் பவார். இவர் மருத்துவமனை ஒன்றில் வார்டு பாயாக வேலை செய்து வந்தார். அங்குஷ் பவார் மூன்று ஆண்டுகளாகப் பெண் ஒருவரைக் காதலித்து வந்தார்.
பின்னர், காதலியிடம் அங்குஷ் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கு அவர், சில காலம் செல்லட்டும் என கூறி வந்துள்ளார். இதனால் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இப்படி, சம்பவத்தன்று மீண்டும் காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குஷ் பவாரைப் பார்த்து 'இறந்து போ' என காதலி தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பேஸ்புக் லைவில்,"தனது காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், அவரை மூன்று ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும்" கூறியுள்ளார்.
பின்னர், தன் அறையில் அங்குஷ் பவார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!