India
இறந்துவிட்டதாக கூறி தலித் சிறுமியின் உடலை எரித்த கோவில் பூசாரி: பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார்!
டெல்லி நங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம், அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகளைக் காணவில்லை என சிறுமியின் பொற்றோர் தேடி அழைந்துள்ளனர்.
இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி சிறுமி ஒருவரை மயானத்தில் எரித்துக்கொண்டிருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பதறியடித்துச் சென்ற பார்த்தபோது, கோவில் பூசாரி உட்பட 4 பேர் சிறுமியின் உடலை ஏரித்துக்கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர் பூசாரியை தாக்கியுள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து விசாரித்தபோது, சிறுமி தண்ணீர் தொட்டியில் இருந்த மின் ஒயரை தொட்டதால், இறந்து விட்டதாக கூறி, தாயின் சம்மதம் பெறாமலேயே சிறுமியின் உடலை எரித்தாக கூறியுள்ளனர்.
பின்னர் எரிந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூசாரி மற்றும் அவரது 3 நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பூசாரி ராதே சியாம் (55) உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!