India

முகக்கவசத்தை கால்விரலில் தொங்கவிட்ட பாஜக அமைச்சர்: இதுதான் தடுப்பு நடவடிக்கையா? - நெட்டிசன்கள் விமர்சனம்!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறித்து ஒன்றிய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சரே அலட்சியமாக முகக்கவசத்தை கால்விரலில் தொங்கவிட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சர்கள் முகக்கவசம் அணியாமல் அமர்ந்து பேசும் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்த் தனது முகக்கவசத்தை கால்விரலில் தொங்க விட்டிருந்தார். தற்போது இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்தின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். முகக்கவசத்தினை இப்படி இஷ்டம்போல அணிவதால்தான் இந்தியாவில் கொரோனா இறப்பு அதிகமாக இருக்கிறது என நெட்டிசன்கள் அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்தை விமர்சித்து வருகிறார்கள்.

மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், காலில் முகக்கவசம் அணிந்தபடி பொதுமக்களுக்கு எந்த வகையான கருத்தை யத்தீஸ்வர் ஆனந்த் கூற வருகிறார் என கேள்வி காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கரிமா தசவுனி கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது” - ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு!