India
“பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கும் நன்மை” - ICMR நிபுணர் விளக்கம்!
பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் தாய்க்கு உருவாகும் எதிர்ப்பொருள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாலூட்டும் தாய்மார்கள், கொரோனாவுக்கு எதிராக எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர்ப்பொருள், தாய் பாலூட்டும்போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தி, எதிர்ப்பொருள்களை மட்டும் சார்ந்தது அல்ல என்பதால், எதிர்ப்பொருள் பரிசோதனைக்கு செல்வது வீண். உடலில் உருவாகும் எதிர்ப்பொருட்கள், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பொருட்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஒருவர் தடுப்பூசி போடும்போது இரு வகையான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. ஒன்று எதிர்ப்பொருளை சமநிலைப்படுத்தும். இரண்டாவது செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போட்ட பின்பு ஏற்படுகிறது இது உடல் செல்லில் இருக்கிறது. வைரஸ் உடலில் நுழையும்போது, இது எதிர்த்துச் செயல்படுகிறது.
ஆஸ்துமா, தூசி அலர்ஜி, மகரந்த துகள் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்களும், உடல்நிலை சீராக இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களும், இதர பிரச்னைகள் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.
புதிய வகை கொரோனா பரவும் நிலையில் ஏற்கெனவே கூறப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே உள்ள கொரோனா வகையாக இருந்தாலும், புதிய வகை கொரோனாவாக இருந்தாலும், அனைத்து வகைகளும், பரவும் விதம் ஒரே மாதிரியானதுதான். முகக்கவசம் அணிவது, கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது, கிருமிநாசினி ஆகியவை இன்னும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் திறமையான நடைமுறைகளாக உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!