India
“பள்ளிகள் திறக்க இதுதான் ஒரு வழி”: எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா சொல்வது என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்தே பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இரண்டு வருடங்களாக இணைய வழியிலேயே பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு மட்டும் இணை வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது.
அதேநேரம், பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் இருப்பதால், அனைவரும் தேர்ச்சி என மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருந்தபோது மாணவர்களின் கல்வி முற்றாகப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இணையவழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பள்ளிகள் திறப்புக்கான ஒரு வழி என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரன்தீப் குலேரியா கூறுகையில்,"குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது செய்வது ஒரு மைல்கல் சாதனையாகும். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் அவர்களுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் தடுப்பூசி மட்டுமே வழி வகுக்கும்.
2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தரவு செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிறகு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி கிடைக்கும்.
கொரோனா தொற்றுநோயால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்வி பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!