India
“அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்த பிறகு உங்கள் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை தொடருங்கள்” : ராகுல் காந்தி சாடல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில அரசுகள் தாயார் நிலையில் உள்ளன.
இருப்பினும் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 4% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விதிகம் குறித்த ஒரு வரைபடத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!