India
“மாடுகளை திருட முயன்றதாக கூறி 3 முஸ்லிம் இளைஞர்கள் அடித்துக் கொலை” : இந்துத்துவா கும்பலின் வெறிச்செயல்!
திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் கால்நடைகளைத் திருட முயன்றதாக கூறி, முஸ்லிம் இளைஞர்கள் 3 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட் டுள்ளனர்.
திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தின் வடக்கு மகாராணிபூர் கிராமம் அருகே, ஞாயிறன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மினிவேனில் 5 கால்நடைகள் அகர்தலா நோக்கி கொண்டு செல்லப்படுவதை, அங்குள்ள நமஞ்சோய்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், அதிகாலை 4.30 மணிக்குப் பார்த்துள்ளது.
பின்னர் அந்த வாகனத்தை துரத்திச் சென்று வடக்கு மகாராணிபூர் கிராமம் அருகே மடக்கிய அந்த கும்பல், வாகனத்தில் இருந்தவர்கள் மீது பல்வேறு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியான நிலையில், ஒருவர் தப்பியுள்ளார். ஆனால், அவரையும் வடக்கு மகாராணிபூருக்கு அருகிலுள்ள பழங்குடியின குக்கிராமமான முங்கியாகாமியில் மடக்கிய கும்பல், அங்கு வைத்தே அடித்துக் கொன்றுள்ளது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரிபுரா காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் செபாஹிஜாலா மாவட்டத்திற்கு உட்பட்ட சோனாமுரா பகுதியைச் சேர்ந்த ஜெயத் ஜூசைன், பிலால் மியா மற்றும் சைபுல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?