India

புதிய தடுப்பூசி திட்டம் நாளை அமல்; 13கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு கிடைக்க வாய்ப்பு -அதிகாரிகள் தகவல்

ஒன்றிய அரசே தடுப்பூசி கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் 13 மாநிலங்கள் தொடர் அழுத்தம் கொடுத்தன. உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசின் முந்தைய தடுப்பூசி திட்டத்தை கடுமையாக விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி திட்டத்தை மாற்றுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 சதவீதத்தை ஒன்றிய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் பெற்றுக் கொள்ளலாம். தனியார் விற்பனைக்கு தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயித்த விலையை அப்படியே ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. தடுப்பூசி போட சேவைக் கட்டணமாக 150 ரூ தனியார் மருத்துவமனைகள் வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு விநியோகிக்கும் தடுப்பூசியை யார் யாருக்கு முன்னுரிமை அடிப்படியில் போடலாம் என்பதை மாநில அரசுகளே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே, ஜூலை மாத தேவைக்கு 13 கோடி தடுப்பூசி மாநிலங்களுக்கு என்று வழங்கப்பட வாய்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: “கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது; அடுத்த 6 - 8 வாரங்களில் துவங்கும்” - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!