India
இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை தொற்று.. கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை விட ஆபத்தானதா? - கொரோனாவை பின்தொடரும் கோரம்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் கடந்தாண்டை விட தீவிரமாக உள்ள நிலையில், புதிதாக கருப்பு வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகள் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பலருக்கு கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
'மியூகோர்மைகோசிஸ்' என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் கண் கீழ்ப்பகுதியில் வலி, மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் பூஞ்சை நோய் தாக்குதல் வெள்ளை, மஞ்சள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. பீகாரில் வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியபட்டது. இது கருப்பு பூஞ்சையை விட அபாயகரமானது எனக் கூறப்படுகிறது.
தற்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளை விட ஆபத்தான மஞ்சள் நிற பூஞ்சை நோய், உத்தர பிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் பூஞ்சை நோய் தாக்குதல் பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
சோர்வு, பசியின்மை, எடை இழப்பு ஆகியவை மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் ஆகும். மிகத் தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடல் உறுப்புகள் செயலிழப்பது, கண்களைச் சுற்றி கருமை நிறம் ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
சுகாதாரமற்ற நிலை தான் மஞ்சள் பூஞ்சை தொற்று பரவுவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!