India
பிரதமராக 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் மோடி; மே 26-ஐ கருப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு!
பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள மத்திய மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, என பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு மாதம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலைக்கு இடையேவும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் பொது அமைதிக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காமல் உரிமையை நிலைநாட்டும் எண்ணத்தில் உறுதியோடு உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியதை அடுத்து வருகிற மே 26ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடிக்கப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு போராட்ட இடங்களிலும், வீடுகளிலும், கிராமங்களிலும் தனித்தனியாக கூட்டம் சேர்க்கப்படாமல் பல வடிவங்களில் கருப்பு தினப் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது போக, மே 25 ஆம் தேதிக்குள் விவசாய கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் போராட்டம் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என்று கெடுவிதித்து பிரதமருக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று கடிதம் எழுதினர்.
இதனைத் தொடர்ந்து இன்று கருப்பு தின போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனிடையே 26 ஆம் தேதி கருப்பு தின போராட்டத்தில் கலந்துகொள்ள கூடுதல் பஞ்சாப் விவசாயிகள் டெல்லி புறப்பட்டுள்ளனர்.
மேலும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் மே 26ம் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!