India

பெருந்தொற்றிலும் பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்தி குளிர்காயும் மோடி அரசு - கையறு நிலையில் மக்கள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

நாடு முழுதும் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 94.54 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 88.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.94.71 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.88.62 ஆகவும் உள்ளது.  இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிப்பு உள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் கவலை அளிப்பதாக சாமானிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Also Read: “கொரோனாவால் பலியான போலிஸார் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு”- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!