India
"மூன்றாவது அலையைத் தடுக்க இப்போதே தயாராகுங்கள்" : மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி இந்தியாவையே உலுக்கி வருகிறது. தினந்தோறும் 4 லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதால் மத்திய மோடி அரசு என்னசெய்வது என்று தெரியாமல் திணறிவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,12,262 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3,980 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் 3வது அலை தவிர்க்க முடியாதது என்றும், இது எந்த நேரத்தில் தாக்கி எப்போது உச்சத்தை அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் நேற்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து இன்று, கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இப்போதே மத்திய மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற கொரோனா தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். 2வது அலை இளைஞர்களையே அதிகம் தாக்கியுள்ளது. இதனால் 3வது அலை குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இப்போதே மத்திய மாநில அரசுகள் தயாராக வேண்டும். மேலும் எம்.பி.பி.எஸ் முடிந்த மாணவர்கள் மற்றும் பி.ஜி.யில் சேர இருக்கும் மாணவர்களை கொரோனா பணியில் பயன்படுத்துவது குறித்து மாநில அரசுகள் ஆராய வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!