India
“பிரதமரின் சைக்கோ அதிகாரிகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது” - சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவே தேவை என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் மூன்று லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மூத்த மருத்துவத்துறை வல்லுநர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதைத் தவிர்க்க முடியாது என்று மத்திய அரசை எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க அரசின் போதாமைகளையும், தோல்விகளையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கண்காணிப்புக் குழு தேவை எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் மூன்றாவது அலை பேராபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை” என்று கடுமையாகச் சாடியுள்ளார்
ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள், தடுப்பூசி பற்றாக்குறை கடுமையாக நிலவி வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!