India

தாயின் சடலத்தை 20 கி.மீ தொலைவுக்கு பைக்கிலேயே எடுத்துச்சென்ற மகன் - ஆம்புலன்ஸ் வராததால் அவலம்!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், இறப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

கொரோனா நோயாளிகளை இஷ்டத்துக்கு எரிப்பது, புதைப்பது என்று கண்ணியமற்ற முறையில், அரசுகள், மாநகராட்சிகள், மருத்துவமனைகள் நடந்துகொள்வதாக உச்ச நீதிமன்றமே எச்சரித்திருந்தது.

ஆனால் அதையும் மீறி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதாபாபிமானமற்ற முறையில், அரசுகளும், மருத்துவமனை நிர்வாகங்களும் கையாண்டு வருகின்றன.

ஆந்திராவிலும் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சோதனை முடிவு வருவதற்குள்ளாகவே அப்பெண்மணி திடீரென உயிரிழந்தார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வெளிவந்துள்ளது.

உயிரிழந்த அப்பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தவித்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் என்பதைக் காரணம் காட்டி ஒரு ஆம்புலன்ஸும் வர ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சடலத்தை நடுவில் உட்காரவைத்தே எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்துவிழுந்து பலி... ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு!