India

கொரோனாவால் நலிவடைந்த ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புக் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி , காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நாடுமுழுவதும் ஏற்கெனவே கொரோனா ஊடரங்கள் மக்கள் வாழ்வாதம் இழந்து தவித்து வரும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் நாட்டு மக்களின் நிலைமை படுமோசமாக மாறியவிடும்.

இந்நிலையில் இதனைக் கருத்திக்கொண்டு, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடித்ததில், “கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஊரடங்கால் பாதிக்கப்படும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 உதவித் தொகை வழங்க வேண்டும். அதேபோல், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தனிகவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, லம்பெயர்ந்தவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல தடையற்ற போக்குவரத்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும். விருப்பப்படும் அனைவருக்கும் அவரவர் விருப்பத்தின் பேரில் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எனவே, இதனை சரிசெய்ய உற்பத்தியை அதிகரிப்பதோடு, புதிய தடுப்பு மருந்துகளுக்கான அனுமதியை தாமதமின்றி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பட்டும் திருந்தாத காவல்துறை : கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்குதல்!