India

அனுதினமும் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா; வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்க்கும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 879 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 90 ஆயிரத்து 584 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 839 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 11 லட்சத்து 8 ஆயிரத்து 87 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 10 கோடியே 15 லட்சத்து 95 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதற்கான எந்த முத்தாய்ப்பான நடவடிக்கைகளையும் மோடி அரசு ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.