India
“மே இறுதி வரை கொரோனா தாக்கம் நீடிக்கும்” : தடுப்பு நடவடிக்கையில் ஆமை வேகத்தில் இருக்கும் மோடி அரசு !
இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தொற்று கடந்த ஒருமாதமாக வேகமாகப் பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மத்தியில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவத்தொடங்கியது. குறிப்பாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ்தாக்கம் மிக மோசமாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 89 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும். மேலும் 714 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைப்போல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களை இன்னும் அச்சமடையச் செய்துள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிபுணர் குழு கொரோனா 2வது அலை குறித்து ஆய்வு செய்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் ஏப்ரல் மத்தியில் கொரோனா வைரஸ் உச்சத்தைத் தொடும் என்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் மணீந்திர அகர்வால், நடத்திய ஆய்விலும், கொரோனாவைரஸ் பாதிப்பு மே மாதம் அவரை இருக்கும் என கணித்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "ஏப்ரல் 15 முதல் 20ம் தேதிக்குள் கொரோனா தொற்று உச்சத்தை தொடும். அப்போது தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம்.
இது கூடவும் வாய்ப்புள்ளது. மேலும் மே இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாகக் குறையும். அடுத்த 4 நாட்களில் பஞ்சாபில் வைரஸ் பரவல் உச்சத்தைத் தொடக்கூடும். அதேபோல் ஏப்ரல் 10ம் தேதி அளவில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டலாம்” என தெரிவித்துள்ளார்.
அதபோல், ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனன் கூறுகையில், “ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் மத்திக்குள் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும்” என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது நாள்தோறும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 60 சதவீதம் பேர் அந்த மாநிலத்தில் உள்ளனர். அங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் 2-வது கரோனா அலையைக் கட்டுப்படுத்த முடியும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!