India
’படித்தவர்களை எங்களால் ஏமாற்ற முடியவில்லை’ : கேரளாவின் ஒரே BJP MLA கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க, சுயட்சை வேட்பாளர்கள் என 2,138 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் தற்போது ஆட்சி செய்து வரும் இடது ஜனநாயக முன்னணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என மக்களும் தெரிவித்து வருகின்றனர், அதேவேளையில், கருத்துக்கணிப்பு முடிவுகளும் கேரள இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு ஆதரவாக வந்துள்ளது.
இதனால் பா.ஜ.கவினர் பலரும் தேர்தல் பணி செய்யாமல் புறக்கணித்து வருகின்றனர். இதனிடையே பா.ஜ.க சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்கள் 3 பேர் தாங்கள் போட்டியிடமாட்டோம் என அறிவித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் பா.ஜ.க ஏன் வெற்றி பெற முடியவில்லை என்ற கேள்விக்கு அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கேரள பா.ஜ.கவின் மூத்த தலைவரும், அம்மாநில எம்.எல்.ஏ-வுமான ஓ.ராஜகோபால் அளித்துள்ள பேட்டியில், “கேரளாவில் நிலைமை முற்றிலும் வேறானது. அங்கு பா.ஜ.க வளராமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
குறிப்பாக, கேரளாவில் உள்ள 90 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். அவர்கள் சிந்திக்கின்றனர். அரசியல் சார்ந்து விவாதிக்கின்றனர். இவையெல்லாம், படித்த மக்களுக்கே உரித்தான பண்பு; இது ஒரு முக்கிய பிரச்சனை. இதனால் கேரளாவில் பா.ஜ.க-வுக்கு சூழ்நிலை வேறு விதமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!