India
“சிறுவர்களைக் கடத்தி பாலியல் தொல்லை.. கூச்சலிட்டதால் கொலை”- குற்றவாளியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ளது தடேப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தில் மார்ச் 14ம் தேதி ஒரு சிறுவனைக் காணவில்லை என காவல்நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது. பின்னர் அதே நாளில் மற்றொரு சிறுவனைக் காணவில்லை என புகார் வந்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 11ம் தேதி தடேப்பள்ளி காவல்நிலையத்துக்குச் சிறுவன் காணவில்லை என புகார் வந்துள்ளது. ஒரு மாத காலத்தில் மூன்று சிறுவர்கள் அடுத்தடுத்து காணவில்லை என புகார் வந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் காவல்துறைக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மூன்றாவது சிறுவன் காணாமல் போன, இரண்டு நாட்களில் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சிறுவனின் கை, கால்கள் உடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர், அதே ஊரைச் சேர்ந்த கோபி என்ற இளைஞன் மீது சந்தேகம் எழுந்து அவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சிறுவனைக் கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது, சிறுவன் கூச்சலிட்டதால் கடுமையாகத் தாக்கி கொலை செய்தேன் என கோபி தெரிவித்துள்ளான். மேலும், சமீபத்தில் வேறு சிறுவனை இதேபோல் கொலை செய்து கால்வாயில் வீசியதாகவும் கூறி காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளான் கோபி.
பின்னர், இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கோபியின் உளநிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் சைக்கோ போன்று செயல்பட்டுள்ளார். இந்த வழக்கில் அறிவியல் ரீதியிலான தடயவியல் ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த நபரை வெளியில் விடுவது சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!