India
விலைக்கு வாங்கும் பா.ஜ.கவில் இருந்தே விலகிய 2 எம்.எல்.ஏக்கள் : அசாமில் தோல்வி பயத்தில் மோடி- அமித்ஷா!
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையிலும், வேட்பாளர்கள் அறிவிப்பிலும் மும்மரமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஹொஜாய் தொகுதியின் ஷிலத்யா தேவ் மற்றும் சில்சர் தொகுதியின் தீலீப் குமார் பால் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.கவில் உள்ளனர். இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பா.ஜ.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், தங்கள் பெயர் இடம்பெறாததை அடுத்து பா.ஜ.கவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
முன்னதா, பா.ஜ.கவின் மூத்த தலைவரும், அமைச்சராகவும் இருந்த சும் ரோங்ஹாங், கடந்தவாரம் பா.ஜ.கவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது இரண்டு எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருவது நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!