India
தேர்தல் காலங்களில் இந்தியாவில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல் : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவிட்டதாககூறி, கொரோனா கட்டுபாட்டு விதிகள் தளர்த்தப்பட்டது. இதில், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது.
மேலும் அரசு நடவடிக்கைகளில் மூலம் குறைக்கப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதாவது, கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொங்கியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,92,088 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 108 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,57,656 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 14,234பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, 1,80,304 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணமடைந்தோர் விகிதம் 96.98% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.61% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,94,97,704 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மதிக்காமல், சமூக இடைவெளிய கடைபிடிக்காமல் செயல்படுவது மேலும் கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!