India
பிரிந்து வாழும் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்... கல்லால் அடித்து மீட்ட பொதுமக்கள்!
குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு மனைவியை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்த கணவரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டி, மனைவியை மீட்ட சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் நாகேஸ்வரராவ், நவ்யா. நாகேஸ்வரராவ் தனது மனைவி நவ்யாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், அவர் பக்கத்து தெருவில் தனியாக வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
நாகேஸ்வரராவ் பலமுறை நவ்யாவை வீட்டிற்கு அழைத்தும் அவர் வராததால் அருகில் உள்ள மறைவான அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். வலி தாங்க முடியாமல் நவ்யா சப்தமிட்டுள்ளார்.
இதையடுத்து, சாலையில் சென்ற பொதுமக்கள் நவ்யாவை மீட்டு நாகேஸ்வரராவை கல்லால் எறிந்து விரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நவ்யாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேற்கொண்டு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரிடம் பிடிபட்ட நாகேஸ்வரராவ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் இவ்வாறு செய்தாரா என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். துன்புறுத்தல் காரணமாக பிரிந்து வாழும் மனைவியை கணவனே கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நிதர்சன் உதயா
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!