India
விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த பெங்களூரு மாணவி கைது.. சர்வாதிகாரத்தின் உச்சத்தில் மத்திய மோடி அரசு..!
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் 81நாட்களாக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஜனவரி 2ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலக பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, இந்திய பிரபங்களோ எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. மேலும் ஜனநாயக முறையில் போராடி வருவோர் மீது மத்திய மோடி அரசு தேசிய பாதுகாப்பு சட்டங்களை ஏவுதல் தேசத்துரோகி என பச்சைக்குச்சும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் கணக்குகளை முடக்குவதோடு அவர்கள் மீது அடக்குமுறையையும் மோடி அரசு ஏவி வருகிறது. அவ்வகையில் ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சூழலியர் செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்கின் விவசாயிகளுக்கு ஆதரவான ட்விட்டர் டூல்கிட்டை திருத்தி பெங்களூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, 22 வயதான மாணவி திஷா ரவி மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததோடு டெல்லி சைபர் க்ரைம் போலிஸார் வடக்கு பெங்களூரூவில் உள்ள திஷா ரவியின் இல்லத்தில் வைத்தே அவரை கைது செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதன் பிறகு, திஷா ரவியை 5 நாட்கள் போலிஸ் காவலில் அடைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படும் மத்திய பாஜக அரசு அறிவிக்கப்படாத சர்வாதிகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவது பெரும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!