India

“விவசாயிகள் போராட்டத்தை புரிந்துகொள்ளாத அரசால் மிகமோசமான விளைவுகள் ஏற்படும்” - சரத் பவார் எச்சரிக்கை!

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முன்வராத பிரதமர் மோடி, அறுவடைத் திருநாளின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழில் ட்வீட் செய்தார். அதில், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ப.சிதம்பரம், “திருவள்ளுவரை நினைவில் கொண்ட பா.ஜ.க தலைவர்களுக்கு ஒரு குறளைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம் யாம் என்னும் செருக்கு”

50 நாட்களாகக் கடும் குளிரில் நடைபெறும் உழவர் அறப்போராட்டத்தில் உள்ள ஒண்மையை பா.ஜ.க அரசு புரிந்துகொள்ளுமா?” எனச் சாடியிருந்தார்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “விவசாயிகள் கடும்குளிரில் டெல்லி எல்லைகளைச் சுற்றிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள ஒரு விவேகமான ஒரு அரசு தேவை. ஆனால் அது இப்போது இல்லை. அதற்கேற்ற விளைவுகள் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!