India

பல மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைவாக பதிவான கொரோனா தொற்று! #CORONAUPDATES

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 16,505 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,03,40,470 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 214 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,49,649 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 99.46 லட்சத்தை கடந்தது.

இதனையடுத்து, 2.43 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணமடைந்தோர் விகிதம் 96.19% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 2.36% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.36% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,35,978 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 17 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரத்து 761 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Also Read: “இரவு நேரத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை தாக்குதல்” : மோடி அரசு அராஜகம்!