India
‘கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று - பாரத் பயோடெக் சொல்வது என்ன?
'கோவாக்ஸின்' தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஹரியானா மாநில பா.ஜ.க மூத்த தலைவராகவும், அம்மாநில உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராகவும் இருப்பவர் அனில் விஜ். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியை அனில் விஜ் கடந்த நவம்பர் 20ம் தேதி பரிசோதனைக்காக தனது உடலில் செலுத்திக் கொண்டார்.
இந்நிலையில், அனில் விஜ் தனது ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து விளக்கமளித்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 28 நாட்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னர் தான் தடுப்பூசி கொரோனாவை கட்டுபடுத்துகிறதா என்பதும், அதன் செயல்திறனும் தீர்மானிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!